பழநி அடிவாரத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

பழநி அடிவாரத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.

Update: 2024-01-19 11:10 GMT

பழநி அடிவாரம்

பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்.வருடத்திற்கு சுமார் 1.20 கோடி பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 அடிவார பகுதியில் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதன்படி, நேற்று பழநி அடிவாரம் சன்னதி வீதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

Tags:    

Similar News