என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – ஓபிஎஸ் பேட்டி

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.;

Update: 2024-04-24 15:42 GMT

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.


மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்: சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு:நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளித்தார்கள்.

Advertisement

என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்த கேள்விக்கு:அது எப்போதும் வரத்தான் செய்யும். வரவர திருத்தம் செய்து அறிவிப்பார்கள்.அதிமுகவை மீட்பது குறித்த கேள்விக்கு:பொறுத்திருந்து பாருங்கள்.பிரதமர் மோடி இஸ்லாமியர் தவறாக பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: பாரத பிரதமர் பத்தாண்டு கால ஆட்சி சிறப்பாக நடத்தினார். எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்

Tags:    

Similar News