திருமருகலில் வங்கி கடன் இணைப்பு முகாம்
நாகை மாவட்டம் திருமருகலில் மகளிர் திட்டம் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 12:16 GMT
நாகை மாவட்டம் திருமருகல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு திருமருகல் வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி தலைமை தாங்கினார்.இதில் திட்டச்சேரி இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன்,திருமருகல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க மேலாளர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் கடன் உதவி மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார்.அதனைத் தொடர்ந்து 15 சுய உதவி குழுவினருக்கு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இந்துஜா,கார்த்திகா,சுபஸ்ரீ,லதா ,அண்ணாதுரை,கார்த்திகா ஐயப்பன் மற்றும் அலுவலக பணியாளர்கள்,சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.