தேசிய வில்வத்தை போட்டி - தமிழக மாணவர்கள் 9 பேர் சாதனை

Update: 2023-12-13 02:52 GMT

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒன்பதாவது தேசிய அளவிலான பைக்கா வில்வித்தை போட்டி டிசம்பர் 5,6,7 ஆகிய மூன்று தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்கள் பங்கு பெற்றனர். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.அதில் 12 வயது  பிரிவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பிரசன்னா,ரித்தீஷ்,தர்ஷன் ஆகிய மூவரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.அதைத்தொடர்ந்து 19 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் விஷால்,யோகேஸ்வரன்,விக்னேஷ் தங்கம் பதக்கம் பெற்றனர்.17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற போட்டியில் கவின்,ஹரி,பிரசாத் ஆகியோர் வெள்ளி பதக்கத்தை பெற்றனர். போட்டி முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய வில்வித்தை மாணவர்களுக்கு எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதில் தமிழ்நாடு பைக்கா அசோசியேஷன் பொருளாளர் விஜயகுமார்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News