தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று

Update: 2023-11-17 02:09 GMT

மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தம்மம்பட்டி பேரூராட்சியில்,தமிழக அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.தினந்தோறும் 400 முதல் 500 பேர் வரைபுறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ம்தேதி ஒன்றிய அரசு சார்பில் தேசிய தரச்சான்று நிர்ணயக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய தரச்சான்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு தேசிய தரச்சான்று குழுவினர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி கூறுகையில், 'தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்து, மருத்துவமனைக்கு 90 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 70க்கு மேல் இருந்தால் ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்படும். 90 மதிப்பெண் பெற்றதால், மருத்துவமனைக்கு 3 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் தலா 73 லட்சம் நிதி கிடைக்கும் என தெரிவித்தார். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ அலுவலர் வேலுமணி நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News