பெறுவதற்காகவே மட்டும் புதிய தலைவர்கள் வருகிறார்கள் - சாலமன் பாப்பையா

தா.பாண்டியன் இழப்பதற்காகவே வந்தார் , தற்போது புதிது புதிதாக வரும் தலைவர்கள் பெறுவதற்காக மட்டுமே வருகின்றனர் என மறைந்த தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தின விழாவில் சாலமன் பாப்பையா பேசினார்.

Update: 2024-02-27 06:07 GMT

சாலமன் பாப்பையா 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் டேவிட் பண்ணையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் மற்றும் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெற்றது.,

இந்த விழாவில் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டிய பின் பேசினார்., இன்று புதிது புதிதாக தலைவர்கள் வருகின்றன அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள், என்ன செய்ய போகிறார்கள் ஆனால் தா.பாண்டியன் இழப்பதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தார்., அவருக்கு குடும்பம் இருந்தது, கல்வி இருந்தது, பண வசதி இருந்தது இவ்வளவும் இருந்தும் ஒருவர் பொதுவுடமை வாழ்க்கைக்கு வந்தது பெரிய விஷயம்., நானும் அனுவபவித்து விட்டு தான் விலகினேன்.,

அனைவருக்கும் வருவது போல தா.பாண்டியனுக்கும் பல்வேறு சிக்கல்கள் வந்தன., நான் தப்பித்துக் கொண்டேன் அவர் விருப்பப்பட்டே மாட்டிக் கொண்டார்., நான் அவரிடம் சொல்லிவிட்டு தான் விலகிவிட்டேன் ஆனால் அவர் இறுதி மூச்சு வரை அவர் பேச்சால் பலரையும் ஈர்த்தார்., இறுதியாக பேசிய வார்த்தைகள் கூட இன்றும் நினைவில் இருக்கிறது எனவும்., இப்பேர் பட்ட ஒரு மாவிரன் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் அவரை போற்றி வணங்க வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News