மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம், பிற்படுத்தப்பட்டோர் நலஆணையர் வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ்., திடீர் ஆய்வுமேற்கொண்டு, பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவி பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். பள்ளியில் சுற்றுபுறம் தூய்மையாகவும், அமைதியாகவும் உள்ளதென தெரிவித்தார். மேலும், மாணவர்களை அழைத்து விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் படித்து வருடங்காலத்தின் என்னைப்போல ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நீங்கள் வர வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் மகேஸ்வரி பிற்படுத்தப்பட்டோர் நலஆணையருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். தலைமை ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.