தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் மின்னல் தாக்கியதில் அன்ன தங்கம் என்ற பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலி தட்டப்பாறை போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் மின்னல் தாக்கியதில் அன்ன தங்கம் என்ற பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலி தட்டப்பாறை போலீசார் விசாரணை தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் அன்ன ராஜ் இவரது மனைவி அன்ன தங்கம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இன்று பிற்பகல் 100 நாள் வேலை திட்டப் பணிக்கு சென்று விட்டு உடன் வேலை பார்த்த பெண்களுடன் அன்ன தங்கம் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார் அப்போது ஊருக்கு அருகே உள்ள அம்மன் கோவில் அருகே வரும்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது இதில் மின்னல் கோவில் அருகே உள்ள மரத்தில் விழுந்து அண்ண தங்கம் மீது தாக்கியதுள்ளது இதில் அண்ணன் தங்கம் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார் உடன் வந்த பெண்கள் சிலர் மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர் இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் மின்னல் தாக்கியதில் மயக்கம் அடைந்தவர்களை மீட்டனர் அண்ணன் தங்கம் பலியானது குறித்து தட்டப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தட்டப்பாறை காவல்துறையினர் அன்ன தங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது