குமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் தாசன் (39) மீனவர். இவர் சமீபத்தில் நடந்த அன்பிய தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக தாசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கென்னடி, சுரேஷ், ஜெகன் ஆகியோருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவ தினம் தாசன் அவருடைய நண்பர் அந்தோணி ஆகியோர் முட்டத்தில் உள்ள தனியார் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கென்னடி, சுரேஷ், ஜெகன், குமார் , பினான்ஸ், ரமேஷ், சேவியர் மற்றும் கண்டால் தெரியும் ஐந்து பேர் சேர்ந்து தாசன் மற்றும் அந்தோணியை கைகளால் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் மீனவர்களை தாக்கிய கென்னடி, சுரேஷ், ஜெகன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.