மின்தடை

ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் தடை

Update: 2024-12-25 05:34 GMT
ஈரோடு அடுத்த காந்தி நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(26ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாயைளம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோயில்காட்டு வலசு, எருக்காட்டுவலசு, இச்சிவலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதேபோல், ஈரோடு தெற்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட நடுப்பாளையம், வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(26ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூர், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம், காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர் கருத்திபாளையம், கொளத்துப்பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டம்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நாடார்மேடு(பகுதி), சாஸ்திரி நகர்(பகுதி), நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடிசியா தொழிற்பேட்டை(சோலார்), போக்குவரத்து நகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர்(19 ரோடு பகுதி), பச்சப்பாளி(பகுதி), சஞ்சய் நகர், பாலுசாமி நகர், சிஎஸ்ஐ காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்

Similar News