கைது

கஞ்சா விற்பனை செய்தவர் கைது;

Update: 2025-03-21 07:34 GMT
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி ஜவர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முள்ளம்பரப்பு அடுத்த இளையம்பாளையத்தைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரை கைது செய்து, 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News