மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்;

Update: 2025-03-21 07:37 GMT
நம்பியூர் அடுத்த ராமநாதபுரம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் குமார் (36). இவரது மனைவி ரஞ்சிதா(32). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரஞ்சிதாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி, ரஞ்சிதா தனது இளைய மகன் சரணுடன், வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் விசாரித்ததில், சிவாவும், ரஞ்சிதாவும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குமார் அளித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News