தற்கொலை

தீராத வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை;

Update: 2025-03-21 07:41 GMT
காஞ்சிக்கோவில் அருகேயுள்ள மாதநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி (40). மதுபழக்கத்திற்கு அடிமையான அவருக்கு, அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், மது அருந்தி விட்டு மனைவி சத்யாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வழக்கமாக படுக்கும் கார் செட்டில், நல்லசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News