கொடுமுடி அடுத்த குளத்துப்பாளையம் புதூரைச் சேர்ந்தஙவர் தனபால் ( 46). இவரது மனைவி ரேவதி(44). இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கொடுமுடி பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலரான ரேவதி, கடந்த 19ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவருடைய போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், அவர் மாயமானதால் தனபால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, தனபால் அளித்த புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான கவுன்சிலர் ரேவதியை தேடி வருகின்றனர். இதற்கிடையே, கவுன்சிலர் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.