வாக்கெடுப்பு
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி பெண் தலைவர் தோல்வி;
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூ ராட்சியில் 15 பேர் கவுன்சிலர்களாக உள் ளனர். அதிமுகவைச் சேர்ந்த ஒரு கவுன் சிலரும், திமுகவைச் சேர்ந்த 8 கவுன்சி லர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்களும், 3 சுயேச்சை கவுன்சி வர்களும் உள்ளனர். இதில், திமுகவைச் சேர்ந்த திலகவதி பேரூராட்சித் தலைவ ராக இருந்து வந்தார்.இவர் மீது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் பல்வேறு குற் றச்சாட்டுகளை கூறிவந்தனர். அதி முக, திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் இணைந்து பேரூராட்சித் தலைவர் தில கவதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். நம்பிக்கை யில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் தலைவர் திலகவதிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பேரூ ராட்சித் தலைவர் திலகவதி நம்பிக்கையில்லாவாக்கெடுப்பில் தோல்வி அடைந் துள்ளார்.இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர் மான வாக்கெடுப்பு தொடர்பாக செயல் அலுவலர் தீர்மான நகல் கொடுக்காத காரணத்தால் கவுன்சிலர்கள் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் அவர்கள் மாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்க ளிடம் மொடக்குறிச்சி முன்னாள் காங் கிரஸ் எம்எல்ஏ ஆர்.என்.பழனிசாமி மற் றும் அப்பகுதி திமுக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரவு 9 மணிய ளவில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார், கவுன்சிலர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நகல்களை அனைத்து கவுன்சிலர்களுக்கும் வழங்கினார். இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெ டுப்பு முடிவுகள் குறித்து பேரூராட்சி உதவி இயக்குநருக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்றும், அதன் பிறகு திலகவதியை பேரூராட்சித் தலை வர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் அவர் தெரிவித்தார்.