சரண்

பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்;

Update: 2025-03-25 02:33 GMT
ஜான் கொலை வழக்கில் சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகனேஸ்வரன் என்ற நபர் ஈரோடு நடுவர் நீதிமன்றம் எண் 3ல் சரணடைந்துள்ளார் ஜான் கொலை வழக்கில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம் திருச்சி பாளையத்தை சேர்ந்த கோகுல சுகவேஸ்வரன் என்ற ஈரோடு நடுவர் நீதிமன்றம் எண் மூன்றில் சரணடைந்துள்ளார்... சேலம் திருச்சி பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் ( எ) சாணக்யா கடந்த 19ஆம் தேதி காரில் வைத்தே கொலை கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது ..ஜான் கொலை சம்பவமானது அவரது மனைவி சரண்யாவின் கண்ணெதிரே காரில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிய நான்கு பேரும், கடந்த 19ஆம் தேதி அன்றே காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிபட்டனர் சம்பவம் நடந்த அடுத்த நாள் இருபதாம் தேதி அதிகாலையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜான் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சலீம் மற்றும் ஜீவகன் ஆகிய இருவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி சரணடைந்தனர்.தனது கணவரின் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஜானின் மனைவி சரண்யா ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹரிடம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார், இந்நிலையில், ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார் ... ஜான் கொலை வழக்கில் சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகனேஸ்வரன் என்ற நபர் ஈரோடு நடுவர் நீதிமன்றம் எண் 3ல் தற்போது சரணடைந்துள்ளார்.

Similar News