தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பெண் வருவாய் ஆய்வாளர் மற்றும் பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி இருவர் கைது.;

Update: 2025-06-20 14:45 GMT
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சாயர்புரம் செல்லும் தேரி ரோட்டில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக வந்த புகார் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் விசாரிக்க சென்ற போது அவருக்கு இடையூறு ஏற்படுத்தி அண்ணன் தம்பி இருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பை அகற்ற அவர்களுக்கு நோட்டீஸ் தாசில்தார் மூலம் அனுப்பப்பட்டது. அது குறித்து விசாரித்து பார்வையிட புதுக்கோட்டை வருவாய் அலுவலர் செல்வலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பரமேஸ்வரி, உதவியாளர் தனபால் ஆகியோர் ஆக்கிரமிப்பு நிலத்தினுள் சென்றபோது அவர்களை வழிமறித்து எங்கள் அனுமதியின்றி நிலத்திற்குள் எப்படி வரலாம் என்று கேட்டு முறப்பநாட்டில் விஏஓ லூர்துபிரான்சிஸ் சேவியரை வெட்டி கொன்றது போல் வெட்டி வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு புதுக்கோட்டை அருகே உள்ள சூசைப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்த ஜேசுராஜேஷ் பீட்டர் (32), அவரது அண்ணன் இருதய ரமேஷ் பீட்டர் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முறப்பநாடு விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை மேற்கோள் காட்டியே தற்போது பெண் வருவாய் ஆய்வாளர் மற்றும் பெண் கிராம நிர்வாக அலுவலர் மிரட்டப்பட்ட சம்பவம் தூத்துக்குடி புதுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News