Update: 2025-08-09 09:57 GMT
அருப்புக்கோட்டையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நகர அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு; நையாண்டி மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியம், ஒயிலாட்டம் கரகாட்டம் என உற்சாகம் பொங்க வரவேற்பு; குத்தாட்டம் போட்ட அதிமுகவினர்; எடப்பாடி பழனிச்சாமிக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டது; தொண்டர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு அகிலன் என பெயரிட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார்‌. இந்த இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தின் நிறைவாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில் அருப்புக்கோட்டை நகருக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நகர அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நையாண்டி மேளம், பேண்ட் வாத்தியம், பறை இசை, ஆடல் பாடல் என அதிமுகவினர் உற்சாகம் பொங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் மேளதாளங்களுக்கு ஏற்றவாறு அதிமுகவினர் பலர் குத்தாட்டம் போட்டது காண்போரை கவர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியாக நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு எடப்பாடி பழனிச்சாமி அகிலன் என பெயர் சூட்டினார்.

Similar News