தூத்துக்குடியில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை விரட்டி பிடித்த போக்குவரத்துப்பிரிவு தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.;
தூத்துக்குடியில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை விரட்டி பிடித்த போக்குவரத்துப்பிரிவு தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடியில் கடந்த 18ம் தேதி இரவு மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஞானமுத்து குரூஸ்ர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை விசாரணை மேற்கொண்டபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். துரிதமாக செயல்பட்ட மேற்படி தலைமை காவலர், அவரை துரத்தி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறப்பாக பணிபுரிந்தார். மேற்படி மெச்சத்தகுந்த பணிபுரிந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்றுமாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.