தீயணைப்புத் துறைக்கு கட்டடப் பணி விரைவில் தொடங்கும் அறிவிப்பு
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
Update: 2023-12-13 09:55 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தீயணைப்புத் துறை அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு இடம் ஒதுக்கீடு செய்து சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என தீயணைப்பு நிலைய வீரா்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், தீயணைப்புநிலையம் கட்டடம் கட்ட ஆண்டிப்பட்டி கிராமத்தில் 3 ஏக்கா் 5 சென்ட் நிலம் ஒதுக்கி பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்த இந்த இடத்தில் தீயணைப்புத்துறை அலுவலகம், வீரா்கள் இல்லம் ஆகியவை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா். ஆய்வின்போது, ஆலங்குளம் தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ், ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் ராதா, கணபதி, சுபாஷ் சந்திரபோஸ், அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.