சேதுபாவாசத்திரம் கடைவீதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, விதி மீறிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-12-16 07:35 GMT
கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படியும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராமலிங்கம் ஆலோசனைப்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர் தலைமையில், பெருமகளூர், ரெட்டவயல், கழனிவாசல், பூக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் கடைகள், உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், ராம்குமார், ஹரிஹரன், ஜீவா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், விதிமீறிய கடைகளுக்கு ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News