நாகர்கோவிலில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவிலில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-21 13:29 GMT

வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில்  ஆசாரிப்பள்ளம் சாலை பகுதியில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று  நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-     கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்,

மார்த்தாண்டம் என 2 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன.  நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 109 பள்ளிகளில்  402 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று 204 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  இதில் 24 வாகனங்கள் சீரமைப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 4 வாகனங்களுக்கு  தகுதி சான்றிதழ்  ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.      தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால்,  வாகனங்களில் தீ அபாயம் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள வேண்டுமென்றும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும்  ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வாகன ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல் உட்பட  துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், வாகன ஓட்டுநர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News