திருவண்ணாமலை : சாய தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்
ஆரணியில் சாய தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் சாயப் பட்டறை உரிமையாளர்கள் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் புகார்;
ஆரணியில் பட்டு பூங்கா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பட்டு சேலை உலகம் முழுவதும் புகழ் பெற்றது. ஆரணியில் பட்டு சேலை தயாரிக்க பட்டு நூல்களுக்கு சாயம் போடும் பட்டறைகள் 26 உள்ளன. பட்டு சேலை உற்பத்தியாளர்கள் பட்டு நூலை சாயப் பட்டறையில் கொடுத்து தேவையான வண்ணங்களை போட்டுக் கொள்வார்கள். சாயப் பட்டறைகளில் சாயம் போட்ட பின் வெளியேற்றும் தண்ணீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றுமாவட்ட பட்டு கைத்தறிஅதிகாரிகள் சாயப் பட்டறை உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்சுமார் 20 வருடத்திற்கு முன்பு ஆரணியை அடுத்த படவேடு செல்லும் சாலையில் பட்டு நூலுக்கு சாயம் போடுவதற்காக அரசாங்கம் இடம் ஒதுக்கீடு செய்து அதில் சாயம் போட்டு வந்தனர். சில மாதங்களில் அந்த கட்டிடம் செயல்படாமல் போனது. இதனால் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் சாயம் போடும் வேலைகளை செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட பட்டு கைத்தறி நூல் துறை அதிகாரிகள் சாயப் பட்டறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சாயக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் சாயப் பட்டறைகளை மூட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரனை சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்து அதிகாரிகள் கொடுத் துள்ள நோட்டீஸ் குறித்து தகவல் கூறினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஆரணியில் பட்டு பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை அதற்கான எந்த வித நடவடிக்கைகளும் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
பட்டு பூங்கா துவக்கினால் அங்கு சென்று பட்டு நூலுக்கு சாயம் போட் க்ஷடுக்கொள்வார்கள். அரசு பட்டு பூங்காவில் சாயப் பட்டறை மட்டும் முதலில் துவக்கட்டும். இது குறித்து தலைமைச் செயலகத்தில் நான் கூறுகிறேன். ஆகையால் பட்டு பூங்கா துவங்கும் வரை சாயப் பட்டறை மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். மேலும் ஆரணிக்கு வரும்போது எனக்கு தகவல் தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.