ஆரல்வாய்மொழி பெண் தூக்கு போட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-24 04:21 GMT
மூதாட்டி தற்கொலை 

கன்னியாகுமரி மாவட்டம்,  ஆரல்வாய்மொழி எம் ஜி ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா மனைவி  சரஸ்வதி (56). இவருக்கு இசக்கியப்பன் (36) என்ற மகனும்,  ஒரு மகளும்  உள்ளனர். மகளுக்கு  திருமணம் ஆகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.   இந்த நிலையில்  சரஸ்வதி மகன்  இசக்கியப்பனுடன்  வாழ்ந்து வருகிறார்.

கடந்த 22ஆம் தேதி காலை வழக்கு சம்பந்தமாக இசக்கியப்பன் பூதப்பாண்டி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையில் சரஸ்வதி தூக்கு மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.         

இதனைப் பார்த்த இசக்கியப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News