மயிலாடுதுறையில் ஒருநாள் அடையாள கட்டுமான வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒரு நாள் அடையாள கட்டுமான வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.;
மயிலாடுதுறையில் அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒரு நாள் அடையாள கட்டுமான வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒரு நாள் அடையாள கட்டுமான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக மயிலாடுதுறை கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் கட்டுனர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.க.மான சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கட்டிட பொறியாளர் சங்க துணைத் தலைவர் அபிராமசுந்தரம் முன்னிலை வகித்தார். கட்டுக்கடங்காத கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். விலைகளை கட்டுப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.