பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.;
Update: 2024-02-09 07:55 GMT
பாஜக அலுவலகம் திறப்பு
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. அதன்படி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.