கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-12-13 05:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியான அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலம் உள்ளது.இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.கிறிஸ்மஸ் விழாவின் தொடக்கமாக திருத்தல வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அருள் தல வளாகத்தில் இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்மஸ் குடில் இயற்கையான அமைப்பு, வன விலங்குகள் பொம்மைகளைக் கொண்டும் மற்றும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகான முறையில் அமைத்திருந்தனர். இந்த குடிலை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.அதன் பின்னர், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் குடிலை பார்வையிட்டனர். அதன் பின்னர், கிருஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி கூறினார்.இந்த விழாவில் அச்சரப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News