சங்ககிரியில் நெல் நடவு பணிகள் தீவிரம்
சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் பயிர் நடவு செய்யும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது;
Update: 2023-10-19 06:25 GMT
நெல்நடவு பணி
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர், அரசிராமணி,சென்றாயனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததால் கிணற்றில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வயல்களில் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் அமைத்தனர், இதனையடுத்து நாற்றங்கால் அமைத்து 25நாட்கள் ஆனதும் விவசாயிகள் வயல்களில் டிராக்டர் மூலம் சேற்று உழவு பணி செய்து கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி நெல் பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.