மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி - மாணவர்கள் பங்கேற்பு
மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 09:22 GMT
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட அளவில் 30 பள்ளிகளில் மாணவர்களுக்கான மின் ஆற்றல், பாதுகாப்பு, சிக்கனம் ஆகிய தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை படித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.