அதிமுக வழக்கறிஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Update: 2023-11-26 02:30 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் அடுத்த, வெண்ணமலை பகுதியில் உள்ள ராசி முருகன் மஹாலில்,  கரூர், நாமக்கல், திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள்,அதிமுக நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாய நிலத்தை பாதுகாக்க ஜனநாயக ரீதியில் போராடிய, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்த திமுக அரசை, வழக்கறிஞர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது எனவும், போக்குவரத்து தொழிலாளர்கள் பணி நேரத்தில் தொடர்ந்து தாக்கப்படுவது, பெண் போலீசாருக்கு பாலியல் வன்கொடுமை, அரசு ஊழியருக்கு மணல் கொள்ளையர்களால் நேரடி அச்சுறுத்தல், போதைப்பொருள் நடமாட்டம், வழிப்பறி, அன்றாடம் கொலை, கொள்ளை என சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கிற்கு காரணமான திமுக அரசை வழக்கறிஞர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது எனவும், உண்மை செய்தியை கண்டறிவதற்கான ஃபேக்ட் செக் குழு என்ற பெயரில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள அமைப்பு என்பது, கோயபல்ஸ் சிந்தனையின் புது வடிவமாகும்.மேலும், மிஷன் டைரக்டர் என்ற பெயரில் இக்குழுவின் தலைவராக ஐயன் கார்த்திகேயன் என்பவரை அரசு பணியாளர் நியமன விதிமுறைகளை மீறி தமிழக அரசு நியமி த்துள்ளதை வழக்கறிஞர் பிரிவு கண்டிக்கிறது என்ற மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Tags:    

Similar News