வளசரவாக்கம் கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்
வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள் மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளசரவாக்கம், அகத்தீஸ்வரர் கோவில் குளம் மற்றும் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை துார்வாரும் பணியில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், பொது நலச்சங்கங்கள், நீர்நிலை ஆர்வலர்கள், பொது மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ’களமிறங்குவோம் நமக்கு நாமே’ என, நம் நாளி தழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீர்நிலை குறித்த, விழிப்புணர்வு செய்திகளும், வெளி யிடப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஏரி, குளங்களை துார் வாரும் பணிகளில், ஆர்வத்துடம் ஈடுபட்டு வருகின்றனர்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள, அகத்தீஸ்வரர் கோவில் குளம், பல ஆண்டு களாக துார் வாரப்படாமல் வறண்டு காணப்பட்டது.குளத்தை துார் வாருவதுடன், கரையை பலப்படுத்தி, தண்ணீர் தேங்க வழி செய்ய, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், குளத்தை துார் வாரும் பணியில், பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கோவில் குளத்தில், தண்ணீர் தேங்கி நின்ற போது, சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வாக இருந்தது. குளம் வறண்டு விட்ட நிலையில், தற்போது, 250 அடி ஆழத்திற்கு, ஆழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைக் கவில்லை.ஹிந்து அறநிலையத் துறை அனுமதி பெற்று, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத் தை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மூன்று நாட்களில், குளத்தை துார் வாரி சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். குளத்தில் மழைநீர் தேங்க, மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் குளம் உள்ளது.நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) காலை, திருவொற்றியூர், ’ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ சார்பில், 50 பேர் குழு, குளத்தை சுத்தம் செய்து, உழவார பணியில் ஈடுபட்டனர்.இன்னும் பணிகள் இருப்பதால், வரும் விடுமுறை தினங்களில், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள உள்ளதாக, அக்குழுவினர் தெரிவித்தனர்.