குறைந்த மின் அழுத்தத்தை போக்க, உரிய நடவடிக்கை எடுத்திடுக

குறைந்த மின் அழுத்தத்தை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2024-05-23 12:13 GMT

மின்சார உதவ

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த காவாதுார் ஊராட்சிக்கு, சீவாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், காவாதுார் ஊராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் கோவில் தெரு, புதிய காலனி, பழைய காலனி, ஒத்தவாடை தெரு, தச்சூர் சாலை உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புஉள்ளது.

இதில், வீட்டு மின் இணைப்புகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் மோட்டார் இணைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு செல்லும் மின்சாரம், மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின் சாதனங்கள் பழுது ஏற்படுகின்றன. தரமான மின் மாற்றி இல்லாததால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால், மின் சாதன பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்து வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் மின் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடும், மின் சாதனங்கள் பழுதுஏற்பட்டு, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டு வாசல் பகுதியில் படுத்து உறங்குகின்றனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின் வாரியத் துறையினருக்கும் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரியத் துறையினர், குறைந்த மின் அழுத்தத்தை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News