திருப்பூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் 329 மனுக்கள் பெறப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-11-27 17:26 GMT
திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் 329 மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா , குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 329 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.