சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகிகள் மனு அளிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகிகள் மனு அளித்தனர்.

Update: 2024-05-30 14:26 GMT

மனு அளிப்பு 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகா்மன்ற துணை தலைவா் முத்துக்குமாா் தலைமையில் சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகிகள் மற்றும் 100 ற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சிதம்பரம் உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புகழேந்தியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அரசு அனுமதியுடன் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. சிதம்பரம் புறவழிச்சாலை மற்றும் வண்டிகேட் பகுதியில் 2 இயற்கை எரிவாயு நிலையம் உள்ளது. வண்டிகேட் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் கேஸ் முறையாக வழங்குவது இல்லை. புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிலையத்தில் இயற்கை எரிவாயுக்கு பதிலாக, பயோ எரிவாயு வழங்கப்படுகிறது.

இதனால், ஆட்டோ என்ஜின் உள்ளிட்டவை பழுதாகிறது. எனவே, இரண்டு இயற்கை எரிவாயு நிலையங்களிலும், சிஎன்ஜி கேஸ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News