வீட்டு மனைப் பட்டா கேட்டு கோரிக்கை மனு 

ஆலடிக்குமுளை ஊராட்சியில், வீட்டு மனைப் பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-12-18 15:00 GMT

ஆலடிக்குமுளை ஊராட்சியில், வீட்டு மனைப் பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி முத்து நாயகன் தோட்டம் பகுதியில் வசிக்கும் ரஞ்சிதா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா புகழேந்தி தலைமையில், தஞ்சையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  "நாங்கள் ஆலடிக்குமுளை ஊராட்சி முத்துநாயகன் தோட்டம் பகுதியில், 80 குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, மின்சார வரி ரசீது மற்றும் சாலை வரி அனைத்தும் அரசுக்கு செலுத்தி வருகிறோம். இதுநாள் வரை அதே இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம்.  தற்போது எங்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் இலவச திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு, அந்த இடத்திற்கான பட்டா இருந்தால் தான் வீடு வழங்குவோம் என ஊராட்சி மன்றத்தில் கூறி விட்டனர்.

இதனால், குடியிருக்க சரியான வீடு இல்லாததால் மழை மற்றும் புயல் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.  நாங்கள் கூரை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர், கருணை கூர்ந்து, அரசு விதிகளுக்கு உட்பட்டு, எங்களுக்கு அதே இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.  மனுவின் நகல், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆலடிக்குமுளை ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News