கணவரை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரை மீட்டுத்தரக்கோரி மனைவி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
Update: 2024-04-21 08:28 GMT
சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலா வயது (28). இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் பார்த்திபன் வயது (34). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுபாலாவின் கணவரை அடிப்பது போன்ற வீடியோவை மதுபாலாவின் கணவர் பார்த்திபன் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தற்போது இன்று வரை அவரது கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.