கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மனு

சேலத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-04-30 07:16 GMT

சேலத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.


நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் மனுவை போட்டு வருகின்றனர். வாழப்பாடி அருகே உள்ள அனுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை பெட்டியில் போட்டனர். பின்னர் அவர்கள் கூறும் போது, பூசாரிப்பட்டி கிராமத்தில் கோதமலை வனச்சரக பகுதியையொட்டி நில பெருமாள் கோவில் ஏரி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பி காணப்படும் போது அருகில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இந்த நிலையில் ஏரிக்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News