தருமபுரியில் பாமக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட வன்னியர் திருமண மண்டபத்தில் தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

Update: 2024-05-27 16:09 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024, தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம்,மேட்டூர் சட்டமன்றத் தொகுதிகளின் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.இராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவர்கள் பி.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம்,மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம்,மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி,மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்துக் கொண்டு, கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு

எண்ணிக்கை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News