கத்தி முனையில் பணம்,நகைகளை கொள்ளையடித்த சென்ற மர்ம நபர்கள்

கோயம்புத்தூர் மாவட்டம், இடையர்பாளையம் பகுதியில் ஜவுளி வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Update: 2024-02-25 02:41 GMT

கத்தி முனையில் பணம்,நகைகளை கொள்ளையடித்த சென்ற மர்ம நபர்கள்

கோவை:வடவள்ளி பிரதான சாலை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஏ.பி.அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபுலால்(44).ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மேற்கண்ட முகவரியில் தங்கி தனது உறவினரின் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வருகிறார்.சம்பவதன்று தடாகம் சாலையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு கடைக்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத இருவர் பாபுலாலிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து அவர் கிளம்பி வீட்டை நோக்கி பயணித்த நிலையில் அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் அருகே பாபுலாலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 12பவுன் தங்க சங்கலி,ஏழரை பவுன் பிரேஸ்லெட்,காதில் அணிந்திருந்த கடுக்கன்,செல்போன் மற்றும் பணம் 300 ரூபாயை பறித்து அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்து பாபுலால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள கவுண்டம்பாளையம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News