கன்னியாகுமரி: போலியோ சொட்டு மருந்து முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-03 10:14 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம்

குழந்தைகளை தாக்கும் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை உலகிலிருந்து முற்றிலுமாக அழித்திட 1995-ம் ஆண்டு முதல் ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு முதல் வாய்வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமா கவும் போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று குமரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்கப்பட்டது.

இம்முகாம்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவ மனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 முகாம் கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்துகாணி அரசு பள்ளியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Tags:    

Similar News