வீட்டில் பட்டாசு மூலப்பொருள் தயாரிப்பு - 5 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே குல்லூர் சந்தை பகுதியில் பட்டாசு மூலப்பொருளான வெள்ளை திரியை வீட்டில் தயாரித்த மூன்று பேர் மீதும்,அதற்கான மூலப்பொருட்களை வழங்கிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் குமார். இவர் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த சரவணன், அய்யனன்,ராமமூர்த்தி ஆகிய மூவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அவர்களிடம் இருந்த சாக்கு பையை சோதனை செய்ததில் அதில் எளிதில் தீப்பிடிக்க கூடிய மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் கேடு விளைவிக்கும் என தெரிந்தும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளான வெள்ளைத் திரியை வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பட்டாசு தயாரிக்க பயன்படும் வெள்ளை திரியை வீட்டில் வைத்து தயாரித்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அவர்களுக்கு வெள்ளைத் திரி தயாரிப்பதற்கு மூலப்பொருட்களை மீனாட்சிசுந்தரம் என்ற நபரும் சீனிவாசன் என்ற நபரும் வழங்கியது தெரியவந்தது எடுத்து வெள்ளைத் திரி வைத்திருந்த மூவர் உட்பட அவர்களுக்கு மூலப் பொருள் வழங்கிய இருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் மீது சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.