சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
சேலம் அருகே கடன்தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-09 01:00 GMT
கடன் தொல்லையால் தற்கொலை
சேலம் அன்னதானப்பட்டி வள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (41). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சூர்யா (31). சதீஸ்குமார் தனது குடும்ப செலவுகளுக்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் பெற்றிருந்தார். ஆனால் இதனை முறையாக செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று வீட்டில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.