உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்-கலெக்டர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காஞ்சிபுரம் தாலுகாவில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-02 10:27 GMT

கலெக்டர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், தாலுகா அளவில் தங்கி, அன்றைய தினம் முழுதும், மாவட்ட கலெக்டர் பல்வேறு அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யும் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தாலுகாவில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு பணிகளை கலெக்டர் கலைச்செல்வி துவங்கினார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், அங்குள்ள பிணவறை, ஸ்கேன் சென்டர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கால்நடை மருத்துவமனை, தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது, கூட்டுறவு துறை சார்பில், 7 பேருக்கு, சிறு வணிக கடன்களை வழங்கினார். தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், கோட்டாட்சியர் ரம்யா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டமும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. இதையடுத்து, இ-சேவை மையம், பதிவறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டார். இன்று காலை 9:00 மணி வரை, கலெக்டரின் ஆய்வு பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது."
Tags:    

Similar News