வேளாண்மை உள்ளிட்ட துறையின் திட்ட செயலாக்க ஆய்வு பயணம்

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை உள்ளிட்ட துறையின் திட்ட செயலாக்க ஆய்வு பயணம் நடைபெற்றது.

Update: 2024-05-25 13:42 GMT

ஆய்வு ஈடுபட்ட அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை உள்ளிட்ட துறையின் திட்ட செயலாக்க ஆய்வு பயணம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக மாவட்ட வேளாண்மை வணிக துறையின் சார்பில் திருக்கழுக்குன்றத்தில் செக்கு என்ணெய் பிழியும் இயந்திர மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பயணாளி சூர்யகுமரனிடம் விவரங்கள் கேட்டறிந்தார். ஆட்சியரிடம் வேளாண் அதிகாரிகள் கூறுகைபில் இம்மையமானது தமிழ்நாடு நிர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் – தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் பயணாளி சூர்ய குமரனுக்கு வழங்கப்பட்டது.

6 லட்ச ரூபாய் மதிப்பிலான இம்மையத்திற்கு 2 லட்சம் ரூபாய் மான்யமாகவும், 7 வருடங்களுக்கு 9 சதவிகித வட்டியில் 3 சதவிகிதம் மான்யம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

 தொடர்ந்து துறையின் சார்பில் ஈச்சங்கருணை கிராமத்தில் 67 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட வேர்கடலை உடைப்பு மற்றும் தரம் பிரிப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்க்கொண்டு பயணாளி மீனா குமாரியிடம் நாள்தோறும் உடைக்கப்படும் வேர்கடலையின் அளவு மற்றும் தரம் பிரிக்கும் முறைகள் பற்றி கேட்டறிந்தார். அதிகாரிகள் ஆட்சியரிடம் கூறுகையில் இம்மையம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி 67 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 7 ஆண்டுகளுக்கு 9 சதவிகித வட்டியும் அதில் 3 சதவிகிதம் வட்டி மான்யம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

 ஆய்வின் போது செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, வேளாண்மை இணை இயக்குனர் அசோக், வேளாண்மை துணை இயக்குனர் சா. ரவிகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News