ரூ.1 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் - கூடுதல் ஆட்சியர்கள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைக் கூடுதல் ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் ரூபாய் 70 லட்சத்தில் இரண்டு அடுக்கு நான்கு வகுப்பறை கொண்ட கட்டிடம்,ரூபாய் 14 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தேவரடியான்குளம் சீரமைப்பு பணி ரூபாய் 1.83 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கழிவறை கட்டிடம்,மற்றும் ரூபாய் மூன்று லட்சம்மதிப்பில் திடக்கழிவு உரக்குழி மண்புழு தயாரித்தல் ஆகிய பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப்,விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கடலூர் கூடுதல் ஆட்சியர் சரண்யா ஆகியோர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்ட கூடுதலாச்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை எவ்வாறு பிரிக்கப்படுகிறது, பிளாஸ்டிக் எவ்வாறு அகற்றி சுத்திகரிப்பு செய்து அறைக்கப்படுகிறது, மண்புழு உரம் தயாரித்தல், அதன் விற்பனை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், உதவி பொறியாளர் சரவணன், சிவக்குமார், ஆணையாளர்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் ,துணைத்தலைவர் மல்லிகாதிருநாவுக்கரசு, துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, ரபியுல்லா,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அண்ணாதுரை, சுஜாதா,ஊராட்சி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.