கண்டன ஆர்பாட்டம்

விருதுநகரில் எலக்ட்ரிசிட்டி போட்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-27 14:17 GMT

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்புதமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போட்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில், படித்தொகையை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியிடம் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கடந்த 16.5.2023 ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி வேலைப்பளுவை உடனடியாக பேசி முடித்திட வேண்டும், பயணப்பட்டியலை 75% லிருந்து 100% ஆக அரசு உயர்த்தி வழங்கியதை உடனடியாக மின்வாரியத்தில் அமல்படுத்திட வேண்டும், தங்களுக்கு குடும்ப நல நிதியை 3 லட்சத்லிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கியதை மின்வாரியம் உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பை பணமாக்கும் முறையை அனுமதித்திட வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்திடவேண்டும், மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை தமிழக அரசு மின்வாரியம் மூலமாக உடனடியாக நியமித்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டதால் ஈடுபட்டனர். மேலும் இந்த நிகழ்வின்போது மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், செயல்தலைவர் தங்கவேல், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News