அதிகாரிகளை கண்டித்து காதில் பூச்சூடி முற்றுகை போராட்டம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அத்துமீறும் விசைப்படகுகளால் நாட்டுப் படகு மீனவர்கள் கடும் பாதிப்பு- மீன் பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமுல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து காதில் பூச்சூடி முற்றுகை போராட்டம்

Update: 2023-11-17 14:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள வாலிநோக்கம் கீழமுதல் மாரியூர் மூக்கையூர் நரிப்பையூர் ரோஸ்மா நகர் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 5000 மீனவர்கள் நாட்டுப் படகு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் கரவலை தோணி நண்டு வலை மீன்வலை தூண்டில் மூலம் கணவாய் பிடித்தல் போன்ற பாரம்பரிய மீன் படிப்பை செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் வாலிநோக்கம் கரையோரப் பகுதிகளில் அதிக குதிரை திறன் கொண்ட விசைப்படகுகளை வைத்து சட்ட விரோத மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் நாட்டுப்புறப் படகுகளின் வளைகள் படகுகள் தொடர்ச்சியாக சேதம் அடைந்து வருவதாகவும் இதுகுறித்து தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த மீனவர்கள்,

காதில் பூ சுற்றிக் கொண்டும் சேதமடைந்த வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முற்றுகை போராட்டத்தையும் செய்தனர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக ரோந்து படகு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்

Tags:    

Similar News