ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

திருப்பத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-12 09:05 GMT

திருப்பத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு தூணி கட்டி கொண்டு மாவட்ட தலைவர் இராசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதை உடனே நிறைவேற்றப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% விழுக்காடு வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்கப்படாத சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர், பட்டு வளர்ச்சி ஊழியர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் போன்ற அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீடு திட்டம் பயனுள்ளதாக இல்லை இதை மாற்றி அழைத்து அனைத்து ஓய்வூதியர்களும் பயன்பெறும் வகையில் மீண்டும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்மேகம், ராமகிருஷ்ணன், தாலுக்கா செயலாளர் காசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News