பட்டுக்கோட்டை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

பணியின் போது பெண் நில அளவை ஊழியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-04 14:50 GMT

கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

பணியின் போது பெண் நில அளவை ஊழியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தில் 5நில அளவையாராக பணியாற்றி வருபவர் பவ்யா.

இவர் அப்பகுதியில் நில அளவை மேற்கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி முருகானந்தன் என்பவர்,அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, பவ்யாவை தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில்,

தாக்குதல் நடத்திய முருகானந்தத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மோகன்ராஜ், மாவட்ட இணை செயலாளர் குணசுந்தரி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பல்வேறு அரசுத் துறை சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ரவுடி முருகானந்தத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News