திருச்செங்கோடு மருத்துவமனைக்கு நவீன ரத்தக் கொடையாளர் படுக்கை வழங்கல்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு நவீன ரத்தக் கொடையாளர் படுக்கை வழங்கப்பட்டது.
நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஏற்பாட்டில் PRD நிறுவனங்கள் சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நவீன ரத்தக் கொடையாளர் படுக்கை வழங்கப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்,PRD நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனரும்,
நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவருமான T.T.பரந்தாமன்,நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனர் சேன்யோகுமார், செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார், இணை செயலாளர் கலையரசி, ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மோகன பானு மருத்துவர் செந்தில், மருத்துவர் தனசேகர் ஆகியோரிடம் வழங்கினார்கள். இந்த நவீன ரத்தக் கொடையாளர் படுக்கை நாமக்கல் மாவட்டத்திலேயே திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்,
கட்சியில் நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ்,வெங்கட்,தீபக், இளவரசன், கிஷோர், ஸ்ரீதர், ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்